சென்னை, லயோலா முன்னாள் மாணவர்கள் தினத்தையொட்டி கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் துணைத்தலைவர் அந்தோணி ராபின்சன், 'ஜெசுட்' சென்னை மாகாணத்தின் தலைவர் பிரிட்டோ வின்சென்ட், லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் சேவியர் பிரிட்டோ, சென்னை கிளை தலைவர் கார்த்திக் சபாநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தினத்தையொட்டி, 2026-ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, வழிகாட்டும் ஒளி விருதுகள் பென்ஜமின் செரியன், சி.ராஜ்குமாருக்கும், வணிகத் தலைவர் விருதுகள் திலிப் ஆர்.வெல்லோடி. விஜய் சங்கருக்கும், சிறந்த சேவைக்கான விருதுகள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஜெயக்குமார், ஐ.ஏ.எஸ். அதிகாரி கேத்தரின் சரண்யாவுக்கும், உலகளாவிய சிறப்பு விருதுகள் சால் பலூர், மொய்ன் பலூருக்கும், தொழில்முறை சிறப்பு விருது சுந்தர் மனோகரனுக்கும். படைப்பாற்றல் சிறப்பு விருது நடிகர் சூர்யாவுக்கும், விளையாட்டு சாதனையாளர் விருது விஜய் அமிர்தராஜுக்கும், லயோலா நண்பர்கள் விருது ரபீக் அகமதுவுக்கும் என மொத்தம் 12 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இறுதியில் லயோலா முன்னாள் மாணவர்கள் தினத்தின் தலைவர் ராபின் எம்.ஏ.ஜேக்கப் நன்றியுரை கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/loyola-alumni-day-awards-for-12-individuals-including-actor-suriya




