சேலம், சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவி லில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக் கம். அதன்படி இந்தாண்டு ஆடித்திருவிழா கடந்த மாதம் 21-ந்தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 22-ந்தேதி கொடியேற்றமும், 28-ந்தேதி கம்பம் நடுதலும் நடைபெற்றது. முன்னதாக ஆடி மாதம் முதல், 2-வது, 3-வது வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி ஆடி 18 சிறப்பு பூஜையும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. அன்று இரவு சக்தி அழைத்தல் நடைபெற்றது. 4-ந் தேதி காலை சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து அன்று இரவு முதல் கோவிலில் பொங்கல் வைத்தல் வைபவம் தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் 2-ம் நாளாக கோவி லில் விடிய, விடிய பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் உருளுதண்டம் போட்டும், மாவிளக்கு எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று 3-ம் நாளாக ஏராளமான பெண்கள் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட னர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. கோவில் முன்பு தொடங்கும் தேரோட்டம் முதல் அக்ரகாரம், தேர்வீதி, ஆனந்தா இறக்கம், வள்ளுவர் சிலை, பட்டை கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி இறக்கம், டவுன் போலீஸ் நிலையம் ரோடு வழியாக மதியம் 12 மணிக்கு கோவிலை வந்தடையும். தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்றது. அதன்படி தேர் முழுவதும் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. நகர் முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி தேர் ஊர்வலத்திற்கு முன்பு அம்மன் வேடம் அணிந்து பக்தர்கள் ஆடிப்பாடி, நாதஸ்வரம், பம்பை, கேரள செண்டை வாத்தியம் முழங்க நடத்து வருவார்கள். மேலும் குழந்தைகளின் தடி விளையாட்டு, பாரம்பரிய கலை நிகழ்ச்சி, தாரை, தப்பட்டை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. அதன்படி தேரோட் டம் வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது. நாளை (சனிக்கிழமை) அதிகாலை கூடு துறை பவானி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ந்தேதி சத்தாபரணம் மற்றும் திருவீதி உலாவும், மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-chariot-procession-today-at-the-fort-mariamman-temple




