தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது, கடந்த ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய குற்றப்பிரிவு (CCIB) காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 7 மணி முதல் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. raid சென்னையில் இருந்து இன்று காலை 7 மணி அளவில் மத்திய பொருளாதாரக் குற்றப்பிரிவைச் சேர்ந்த உதவி ஆணையர் செந்தில் தலைமையில் வந்த 14 பேர் கொண்ட காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் வேளையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பாதுகாப்பு கருதி அன்பில் மகேஸின் இல்லத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கிருக்கும் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள் மற்றும் கோப்புகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இன்னொருபக்கம், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டுக்கு வருகை தந்தார். ஆனால், அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் அளித்தல், புதுப்பித்தல் மற்றும் தடையின்மை சான்றிதழ் (NOC) வழங்குவதில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. nehru குறிப்பாக, தகுதியற்ற பல தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாகவும், அதன் அடிப்படையிலுமே தற்போது மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்தச் சோதனையை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/raid-at-anbil-mahesh-related-places-in-trichy




