Articolo completo
அருணகிரிப்பெருமான் வயலூரில் தரிசனம் செய்து வழிபாடுகள் செய்து முருகனை வேண்டிக்கொண்டார். அடுத்து செல்ல வேண்டிய தலம் குறித்து தியானம் செய்ய முருகப்பெருமான் வேடனாய் வந்து விராலிமலை செல்லுமாறு பணித்தாராம். அப்படி அருணகிரிக்கு அருளிய விராலிமலைத் தலத்தின் அற்புதங்களை அறிந்துகொள்வோம் வாருங்கள். `அப்பனே முருகா' என்று வேண்டியதும் வேடனாய் வந்து விராலிமலைக்கு வழிகாட்டினார். அப்போது முருகனின் திருக்கோலம் கண்டு நெகிழ்ந்துபோன அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் முருகப்பெருமானின் அருட்காட்சியை அளிக்கக்கூடிய பாடல் என்று நம்பப்படுகிறது. இப்படி அருணகிரி நாதருக்கு வழிகாட்டிய விராலிமலை முருகனே தன்னை நம்பிய பக்தர்கள் அனைவருக்கும் எப்போதும் வழிகாட்டும் துணைவனாய்; ஆசிரியனாக விளங்குகிறான் என்பது வாரியார் சுவாமிகள் வாக்கு. விராலிமலை சுப்ரமண்ய சுவாமி கோயில் மதுரைக்கும் திருச்சிக்கும் இடையே விராலிமலை உள்ளது. திருச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து வடமேற்கே 40 கி.மீ தொலைவிலும் உள்ளது. முற்காலத்தில் விராலி மரங்கள் சூழ்ந்த மலை என்பதால் இதை விராலிமலை என்றார்கள். சுமார் 2000 ஆண்டுப் பழைமை வாய்ந்த திருத்தலம் இது. ஒருமுறை ஒரு வேடன் வேட்டையாட இங்கு வந்தபோது, சிறுத்தை ஒன்று அவனுக்கு முன்பு ஓடியது. அந்தச் சிறுத்தையைப் பிடித்துவிட வேடனும் அதன் பின்னாலேயே ஓடினான். அப்போது ஒரு குரா மரத்துக்கு அருகில் வந்ததும் சிறுத்தை காணாமல்போனது. இது கண்டு அதிசயித்துப்போனான் வேடன். அங்கே தோன்றிய சேவலும் மயிலும் கண்டு அதிர்ந்தான். மேலும் குப்பென எழுந்த விபூதி சந்தன வாசனையை முகர்ந்த வேடன் அங்கே முருகப்பெருமான் சூட்சுமமாக இருப்பதை அறிந்தான். அவன் அங்கேயே தவத்தில் அமர்ந்துவிட, அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அங்கே ஆலயம் எழுப்பினார்கள் என்கிறது ஸ்தல புராணம். திருநெல்வேலி மாவட்டம் கருங்காடு பரவா எல்லைநாதர் : ஆட்டுத்தலையுடன் நந்தி அருளும் தலம்; ஏன் தெரியுமா? இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யராக மயில்மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். கிழக்கு நோக்கி பத்து அடி உயரத்தில் மயில் மீது அமர்ந்து, திருக்கரங்களில் வேல், சேவல் கொடி, சூலம், வஜ்ராயுதம் ஏந்தி அருள்பாலிக்கிறார். தீப ஆரத்தி காட்டும் பொழுது முருகனின் மூன்று முகங்கள் பக்தர்களுக்குத் தெரிய, பின்புறம் உள்ள கண்ணாடியில் மேலும் மூன்று முகங்களைத் தரிசிக்கலாம். முருகப்பெருமான், அருணகிரியாருக்கு அஷ்டமா ஸித்திகளை இங்குதான் உபதேசித்தார். எனவே இங்கு முருகப்பெருமானை முறையாக வழிபட அஷ்டமா ஸித்திகளையும் பெறலாம் என்கிறார்கள். விராலிமலை சுப்ரமண்ய சுவாமி கோயில் ஆதிக் கோயிலை அழகிய மணவாளன் என்ற சோழ மன்னர் அமைத்தார் என நம்பப்படுகிறது. பிறகு 9-ம் நூற்றாண்டில் ஆதித்த சோழன் திருப்பணி செய்யப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. இவர்களுக்குப் பிறகு நாயக்கர், புதுக்கோட்டை மன்னர்கள் மற்றும் மருங்காபுரியார் வம்சத்தவர்களால் இந்த ஆலயம் திருப்பணிகள் செய்யப்பட்டன. விஜயநகரப் பேரரசின் இரண்டாம் தேவராயர் (கி.பி. 1422-1446) காலத்துக் கல்வெட்டு இங்கு காணப்படுகிறது. திருச்சி மாவட்டம் துடையூர் ஸ்ரீவிஷமங்களேஷ்வரர் கோயில்: விஷக்கடிகள் நீங்கும்... திருமணவரம் கூடிவரும் மலை அடிவாரத்தில் நீராழி மண்டபம் கொண்ட சரவணப்பொய்கை உள்ளது. அதன் கிழக்கே மைக்கண்ணுடைய அம்மன் கோயில் உள்ளது. 207 படிகள் மலையேறினால் முருகனைத் தரிசிக்க முடியும். வாகனங்கள் நேரடியாகச் செல்ல தார்ச்சாலையும் உள்ளது. மலை உச்சிக்குச் செல்லும் வழியில் இடும்பன் சந்நிதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ஒரு சிறிய குகை சந்நிதி உள்ளது. மலைமீது சந்தான கோட்ட மண்டபம், சண்முக மூர்த்தி மண்டபம், நவராத்திரி மண்டபம் உள்ளன. ஆலயத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், அருணகிரிநாதர், சண்டிகேஸ்வரர், பைரவர் சந்நிதிகளும் உள்ளன. தவிர நவகிரக சந்நிதி, நடராஜர்-சிவகாமி, மாணிக்க விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் சந்நிதியும், அநேக உற்சவ திருமேனிகளும் உள்ளன. விராலிமலை சுப்ரமண்ய சுவாமி கோயில் இத்தலத்தின் தீர்த்தம், நாக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தல விருட்சம் காசி வில்வம். மேலும் இந்த ஆலயத்தின் புராணச் சிறப்பாகப் பல கதைகளும் இங்குள்ளன. சனகர், சனந்தர், சனாதனர், சனக்குமாரர் ஆகிய நால்வருக்கும் முருகன் அருள் தந்த திருத்தலம். வசிஷ்டரும் அவர் மனைவி அருந்ததியும் சாபம் நீங்க இங்கு தவமிருந்தனர். பிரம்மனின் சிரத்தைக் கொய்த ஈசனை நாரதர் கண்டித்ததால் உண்டான சிவநிந்தனை சாபம் நீங்க, இங்குள்ள முருகனை வணங்கி பலன் பெற்றார் எனப்படுகிறது. விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இங்கேயே இயற்றினார். திருவாரூர் தட்சிணாமூர்த்தி என்ற அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த திருத்தலம் என நீள்கிறது புராணத் தகவல்கள். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து முருகப்பெருமானை வேண்டிக் கொண்டால் உடனே பலன் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. அப்படி பிள்ளை பிறந்தால் அக்குழந்தையை இங்கு கொண்டு வந்து முருகப்பெருமானிடம் ஒப்படைத்து விடுவார்கள். பிறகு வழிபாடுகள் முடித்து தவிடு விலையாகக் கொடுத்து அதற்குப் பதிலாக அந்தக் குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்கிறார்கள். வேண்டியவருக்கு வேண்டியவை கொடுத்தும், தீராத வினைகளையும் தீர்த்து ஒவ்வொருவரின் வீட்டிலும் பல அற்புதங்களை நடத்தி வருகிறான் விராலிமலை சண்முகன். தெற்கு குடகு சாமி, பகடைச்சாமி, ஆறுமுகச்சாமி போன்ற சித்தர்கள் வசித்த இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். நிம்மதியும் நிறைவும் அடையலாம். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டமலை வேலாயுதசுவாமி : தீராத மனக் கவலை தீர்க்கும் திருக்கோயில்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto



