'லப்பர் பந்து' திரைப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் தனது 56-வது திரைப்படத்தின் பூஜை இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் தனுஷுடன் இணைந்து நடிகர் வடிவேலுவும் நடிக்கிறார். D56 - Dhanush கடந்த 2008-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'படிக்காதவன்' திரைப்படத்தில் வடிவேலுதான் முதலில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். அவர் விலகிய பிறகு, அவருக்குப் பதிலாக நடிகர் விவேக் அந்தப் பாத்திரத்தில் நடித்தார். தனுஷுடன் இத்தனை ஆண்டுகள் இணைந்து நடிக்காதது குறித்து வடிவேலு இந்தப் பட பூஜையில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து பணியாற்றும் சிறந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. 'இத்தனை ஆண்டுகள் ஏன் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை, ஏன் இந்த இடைவெளி?' என்று நீங்கள் கேட்கலாம். D56 - Dhanush நாங்கள் இருவரும் சேரக் கூடாது என்று நினைத்த சில சக்திகள், எங்களுக்கு இடையே தேவையில்லாத மனக்கசப்புகளை ஏற்படுத்திவிட்டன. ஒரு சிறிய தீப்பொறியைப் பற்றவைத்து, அதை மிகப்பெரிய நெருப்பாக மாற்றி எங்களுக்கு இடையே தூக்கிப் போட்டுவிட்டார்கள். ஒரு மூன்றாவது நபரால் தான் இந்த இடைவெளி உருவானது. இந்தப் படத்தின் பூஜை விழாவைப் பார்த்தால் ஏதோ பெரிய 'மாநாடு' நடப்பது போல இருக்கிறது." எனப் பகிர்ந்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/kollywood/vadivelu-clarifies-dhanush-tamizharasan-pachamuthu-d56-launch




