திண்டுக்கல், திண்டுக்கல் - நத்தம் ரோட்டில் உள்ள அபிராமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தனது வீட்டில் சிப்பிப்பாறை இன வகை பெண் நாய் வளர்த்து வருகிறார். இந்த நாய் நேற்று 17 குட்டிகளை ஈன்றது. இதில் 10 ஆண், 7 பெண் குட்டிகள் பிறந்தன. இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இதுகுறித்து அதன் பராமரிப்பாளர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு நேரத்தில் சிறுமலை அடிவாரத்தில் பராமரிப்பு இன்றி சுற்றித்திரிந்த சிப்பிப்பாறை இன நாய் ஒன்றை எடுத்து வளர்த்தேன். இது கடந்த 2023-ம் ஆண்டு 11 குட்டிகளை ஈன்றது. தற்போது மீண்டும் கருவுற்று, 17 குட்டிகளை ஈன்றுள்ளது. 17 குட்டிகள் அழிவின் விளிம்பில் உள்ள சிப்பிப்பாறை இன நாய்களை அதிகரிக்கும் நோக்கத்தோடு, உறவினர்கள், நண்பர்களுக்கு இதனை வழங்க உள்ளோம் என்றார். இந்த நாய்களை பரிசோதித்த சிறுகுடி கால்நடை உதவி டாக்டர் சிங்கமுத்து கூறும்போது, சிப்பிப்பாறை இன நாய்கள் அதிகப்படியாக 4 முதல் 8 குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். இது 17 குட்டிகள் ஈன்றுள்ளது என்பது ஆச்சர்யம் தான். நாய் மற்றும் குட்டிகள் அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளன என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-chippiparai-dog-gave-birth-to-17-puppies-in-one-delivery



