அமெரிக்காவின் கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து, நேற்று எலோன் மஸ்க் கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண் வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். எரிபொருள் கசிவு காரணமாக 3 வாரங்கள் தாமதத்திற்குப் பின் இந்த விண்கலம் ஏவப்பட்டது. வழக்கத்தை விட மிக அதிவேகமாக, வெறும் 8 மணி நேர பயணத்தில் இவர்கள் விண்வெளி நிலையத்தை அடைந்து விடுவார்கள். நாசா வின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப்பயணத்தை கமாண்டர் ஜெசிகா வாட்கின்ஸ் தலைமை தாங்கி நடத்துகிறார். இதன் மூலம் விண்வெளிப்பயணத்தை வழிநடத்தும் முதல் கருப்பின பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இக்குழுவில் அமெரிக்காவின் லூக் டெலானி, ரஷியாவின் செர்ஜி டெடெரியாட்னி கோவ் மற்றும் கனடாவின் ஜோசுவா குட்ரிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் விண்வெளியில் 6 மாதங்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.இதில் நெகிழ்ச்சியான விஷயமாக, கனடா நாட்டைச் சேர்ந்த ஜோசுவா குட்ரிக் விண்வெளியில் இருக்கும் போதே, அவரது மனைவிக்கு நவம்பர் மாத இறுதி யில் 3-வது குழந்தை பிறக்க உள்ளது. இதன் மூலம் விண்வெளியில் இருக்கும் போது தந்தை ஆகும் 4-வது நபர் என்ற பெருமையை ஜோசுவா பெறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/four-astronauts-travel-to-the-international-space-station-aboard-a-spacex-rocket




