சூரமங்கலம், சேலம் மார்க்கெட் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) கடலூர் துறைமுகம்-சேலம் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் சேவையில் மாற்றம் அதன்படி, கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (76813) இன்று, நாளை ஆகிய 2 நாட்களிலும் சேலம் டவுன் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். இதனால் அந்த ரெயில் சேலம் ஜங்ஷன் வரை இயக்கப்படாது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும், சேலம் டவுனில் இருந்து ஜங்ஷன் வரை அதே ரெயிலின் நிறுத்தங்களுடன் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/சேலம்




