புதுடெல்லி, தமிழகத்தில் இளைஞர்களை பெருமளவில் காங்கிரசில் சேர்க்கவும், தொண்டர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அகில இந்திய தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் தமிழகத்திற்கு வருகை தந்து பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னையில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மேலும் சில நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக். முதல் வாரத்தில் ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்கள் எதிர்கொள்ளும் பொதுத் தேர்வுச் சிக்கல்கள், நீட் போன்ற நுழைவுத்தேர்வுப் பிரச்சனைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக உரிமைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக மக்கள் பிரச்சனைகளைத் தீவிரமாக கையில் எடுத்துப் பேசி வருகிறார். குறிப்பாக, வட இந்திய மாநிலங்களில் மாணவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், அரசுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் பட்டியிலன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் இறங்கிப் போராடி வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/rahul-gandhi-to-visit-tamil-nadu-in-first-week-of-oct




