டேராடூன் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இந்தியாவில் 56 பேர், நேபாளத்தில் 24 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத்தாழ்வு, நிலப்பகுதிக்குள் நகர்ந்ததால் மழை தீவிரமடைந்தது. இதனால் உத்தர பிரதேசத்தில் கடந்த 25 முதல் 27-ந்தேதி வரை கனமழை பெய்தது. இதற்கிடையே உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்த மழையை தொடர்ந்து கேதார்நாத் யாத்திரை வழித்தடமான சிர்பாசா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆங்காங்கே சிக்கி தவித்தனர். இதனையடுத்து மீட்புப்படையினர் தீவிரமாக செயல்பட்டு பாறைகள் மற்றும் மணல் கழிவுகளை அப்புறப்படுத்தினர். 56 பேர் பலி நேற்று சுமார் 1,500 பக்தர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக கவுரிகுண்டுவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நேற்று 2-வது நாளாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல உத்தரகாசி மாவட்டத்தில் மலையேற்றம் சென்ற 29 வீரர்களும் சிக்கிக்கொண்டனர். அவர்களை பேரிடர் மீட்பு படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடி மீட்டனர். இதனால் இந்தியாவில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 46 பேர் காயமடைந்து உள்ளனர். 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 24 பேர் பலி நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களால் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். 14 பேரை காணவில்லை. நேபாளத்தின் மஸ்தங் மாவட்டத்தில் காளி கண்டகி ஆற்றில் கனமழையால் மலையின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு எடுத்தது. அருகேயிருந்த மக்கள் கூச்சல் போட்டபடி தப்பி ஓடினர். 747 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளன. கந்தகி மாகாணத்தில் 435 குடும்பங்களை சேர்ந்த 1,500 பேர் புலம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. நிறைய வீடுகள் பேரிடரில் உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/floods-landslides-56-killed-in-india-24-in-nepal




