தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, தொண்டர்கள் விழுப்புரம் அறிவாலயத்தில் அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``எப்போதும் எந்த வயதிலும், தி.மு.க.வின் கொள்கைக்காக பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திராவிட இயக்கச் சிந்தனைகளைப் பரப்பி அதை வேரூன்ற செய்தவர் நம் தலைவர் ஸ்டாலின். அவருடைய வழியில் நானும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நான் சர்ச்சையாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பொன்முடி அந்த நிகழ்ச்சியில் அப்படிப் பேசியதற்கு ஏற்கெனவே மன்னிப்பு கேட்டிருக்கிறேன். அதேபோல இந்த வழக்கைத் தொடர்ந்த சகோதரியிடமும் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்திருந்தேன். நம் தலைவர் ஸ்டாலின் மக்களிடையே மிகச் செல்வாக்கு பெற்று வருகிறார். த.வெ.க-வுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். அந்த அளவுக்குத் தற்போதிருக்கும் அரசியல் சூழலை மக்களே உணர்ந்து வருகிறார்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தற்போது பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கெல்லாம் விரைவில் பதில் வரும். கல்லூரி மாணவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள்" என்றார். `திமுகவில் பொன்முடி ஓரம் கட்டப்பட்டதற்கு காரணமே சி.வி.சண்முகம் தான்!’ - பின்னணியை உடைக்கும் அதிமுக முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/former-dmk-minister-ponmudi-has-stated-that-people-are-regretting-voted-for-tvk




