கோவை, கோவை அருகே உள்ள நீலாம்பூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மனோஜ் (வயது 54). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சூலூரை அடுத்த காங்கேயம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். மனோஜின் மனைவி மற்றும் மகன்கள் குடும்ப பிரச்சினை காரணமாக சொந்த ஊரான கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கண்ணாடி என்ற கிராமத்துக்கு சென்றிருந்தனர். மனோஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனது போனில் மகனிடமும் பேசி உள்ளார். அவர் தந்தையை ஆறுதல்படுத்தி இருக்கிறார். அதன்பிறகும் மன அழுத்தத்தில் இருந்து மீள முடியாமல் இருந்த மனோஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது செல் போன் வாட்ஸ்-அப்பில் உறவினர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளார். அதில் அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள், நான் போகி றேன் என குறிப்பிட்டு விட்டு தற்கொலை செய்துள்ளார். வாட்ஸ்-அப் தகவலை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மனோஜின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அதற்குள் அவர் தூக்குப்போட்டு இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மனோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மனோஜ் தற் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/sensitive-information-on-whatsapp-a-bizarre-decision-taken-by-a-special-sub-inspector




