சென்னை, அறப்போர் இயக்கம் சார்பில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி லஞ்ச ஒழிப்பு போலீஸ் புகார் செய்யப்பட்டது.அதில் மாநில நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்த பணி மேற்கொள்ளாமலேயே பல கோடி ரூபாய் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூர், கரூரில் இந்த ஊழல் நடந்துள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது கடந்த ஜூன் 26-ந்தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரம் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு சென்றுவிட்டார். இதையடுத்து அவரை தேடப்படும் நபராக அறிவித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்தனர். இந்த 'லுக் அவுட் நோட்டீசை' ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் எ.வ.வேலு, புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/ev-velus-plea-challenging-the-look-out-notice-hearing-in-high-court-soon




