சென்னை, மாற்றுத்திறனாளிகள் கோவில்களில் தடையின்றி தரிசனம் செய்ய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். விரைவில் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்டப் பாதுகாப்புச் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கையை அரசு சார்பில் உரிய முறையில் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரைவாக ஆலோசனை மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி கோவில்களுக்குள் சென்று இறைவனை சுமுகமாக தரிசனம் செய்து திரும்புவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, ஏற்கனவே நமது மானியக் கோரிக்கையின் அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்பாட்டிற்காக தானியங்கி மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட தேவையான வசதிகள் கோவில்களில் மிக விரைவில் ஏற்படுத்தித் தரப்படும். எவ்வித தடையுமின்றி தரிசனம் மாற்றுத்திறனாளிகளும் அனைத்து பக்தர்களைப் போலவே எவ்வித தடையுமின்றி, பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னுரிமையுடன் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/facilities-for-differently-abled-persons-will-soon-be-provided-in-temples-minister-ramesh




