பேரூர், கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். கோவை குற்றாலம் கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி பிற பகுதிகளை சேர்ந்த பொது மக்களும் அதிகளவு வருகின்றனர். கோவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. கோவை குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீர்வீழ்ச்சி நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்படுகிறது. அங்கிருந்து வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு அவர்கள் குளித்து முடித்ததும், வனத்துறை வாகனத்தில் மீண்டும் நுழைவு வாயில் பகுதிக்கு அழைத்து வரப்படுகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு தடை கோவையில் கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, பருவ மழையால் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. எனவே கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது. நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்ததும், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/flooding-coimbatore-courtallam-falls-temporarily-closed




