தூத்துக்குடி, தூத்துக்குடி துறைமுக சரக்கு நிலையத்தில் இருந்து அரியானா மாநிலம் பல்லப்கார் நகருக்கு ரெயில் மூலம் 100 மின்சார கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சரக்கு ரெயிலில் அனுப்பப்படும் மின்சார கார்கள் தூத்துக்குடி சிப்காட் அருகில் வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மாதத்துக்கு 1,000 முதல் 2,000 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. அதன்படி கார்களை ஒரே நேரத்தில் அதிக அளவில் பாதுகாப்பாக அனுப்ப ரெயில் போக்குவரத்து உகந்ததாக உள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் 10 சரக்கு ரெயில்களில் மின்சார கார்களை பல்வேறு நகரங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. சரக்கு கட்டண வருமானம் ரூ.22.07 லட்சம் தூத்துக்குடி துறைமுக சரக்கு நிலையத்தில் இருந்து நேற்று முதல் அரியானா மாநிலம் பல்லப்கார் நகருக்கு ரெயில் மூலம் 100 மின்சார கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக கார்களை ஏற்றும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட 25 சரக்கு பெட்டிகளில் இந்த கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் மதுரை கோட்டத்துக்கு சரக்கு கட்டண வருமானமாக ரூ.22.07 லட்சம் கிடைத்துள்ளது. இந்த சரக்கு போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுத்த முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் கணேஷ் தலைமையிலான வர்த்தக வளர்ச்சிக் குழுவுக்கு கோட்ட ரெயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா பாராட்டு தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/electric-cars-travelling-by-train-from-thoothukudi-to-haryana




