தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான ஒளிப்பதிவாலும், அழுத்தமான படைப்புகளாலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த பிரபல ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான செழியன் இன்று (ஜூலை 10) இயற்கை எய்தினார். அவரது மறைவுச் செய்தி தமிழ் சினிமா வட்டாரங்களிலும், சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட செழியன், காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ முடித்தார். சிறு வயது முதலே ஓவியம் மற்றும் புகைப்படக் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்து தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். பி.சி. ஸ்ரீராமுடன் செழியன் 'தம்பி' திரைப்படத்தில் கூடுதல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய இவருக்கு, 2007-ஆம் ஆண்டு வெளியான 'கல்லூரி' திரைப்படத்தில் ஒரு முழுமையான ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். "அவர் மியூசிக்ன்னு சொன்ன உடனே ரொம்ப குஷி ஆகிட்டேன்" - யுவன் குறித்து விக்ரம் பிரபு அதனைத் தொடர்ந்து 'ரெட்டைசுழி', 'மகிழ்ச்சி', 'தென்மேற்கு பருவக்காற்று' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். குறிப்பாக, இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான 'பரதேசி' (2013) திரைப்படத்தில் இவருடைய அசாத்தியமான ஒளிப்பதிவு, சர்வதேச அளவில் லண்டன் திரைப்பட விழா விருது (BFI), எடிசன் விருது மற்றும் ஆனந்த விகடன் சினிமா விருது உள்ளிட்ட பல பெருமைகளைப் பெற்றுத் தந்தது. மேலும், சமூக அவலங்களைப் பேசிய 'ஜோக்கர்' மற்றும் 'தாரை தப்பட்டை', 'சவாரி' ஆகிய திரைப்படங்களிலும் இவரது கேமரா வேலைப்பாடுகள் தனித்துத் தெரிந்தன. அப்துல் கலாம் - ஜெயகாந்தனுடன் செழியன் ஒளிப்பதிவாளராக மட்டுமன்றி, ஒரு சிறந்த இயக்குநராகவும் தமிழ் சினிமாவை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றார் செழியன். அவர் இயக்கி, அவரது மனைவி பிரேமா அவர்களின் 'லா சினிமா' தயாரிப்பில் வெளியான 'டூ லெட்' (To Let) திரைப்படம், வாடகை வீடு தேடி அலையும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் வலியை மிக எதார்த்தமாகப் பதிவு செய்தது. இத்திரைப்படம் 65-வது தேசிய திரைப்பட விருதுகளில் 'சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான' உயரிய விருதைத் தட்டிச் சென்றதுடன், உலகெங்கிலும் உள்ள பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்தது. பரதேசி தான் என் வாழ்க்கையை மாத்துச்சு! - Vedhika | Gajaana | AR Rahman | Bala திரைப்படம் தாண்டி மிகச்சிறந்த எழுத்தாளராகவும் செழியன் திகழ்ந்தார். ஆனந்த விகடன் இதழில் அவர் எழுதிய 'உலக சினிமா' என்ற தொடர், உலகத் திரைப்படங்களை தமிழ் வாசகர்களுக்கு மிக எளிமையாக அறிமுகம் செய்தது. 2004-ல் அவரது 'ஹார்மோனியம்' சிறுகதைக்காக மதிப்புமிக்க 'கதா விருது' பெற்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரின் ஆவணப்படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் 'கொன்றால் பாவம்' மற்றும் 2026-ல் 'மைலஞ்சி' உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவின் கலைத்தன்மையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ஒரு உன்னதப் படைப்பாளியின் மறைவு, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். `தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்வதை பார்ப்பது.'- விஜய்யைச் சந்தித்த அதர்வா, கவின் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/kollywood/renowned-cinematographer-and-director-chezhiyan-has-passed-away



