வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலம் கலபுரகியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-இன்று, ஒட்டுமொத்த நாடும் சட்டவிரோத தேர்தல் க ளின் அடிப்படையிலேயே இயங்கி கொண்டிருக்கிறது. மோடி ஒரு சட்டவிரோத பிரதமர், அமித்ஷா ஒரு சட்டவிரோத மந்திரி, மேலும் எங்கு தேர்ந்தெடுக்கப்பட்டி ருந்தாலும் அனைத்து முதல்-மந்திரி களும் சட்டவிரோதமானவர்களே. அனைத்து தேர்தல்களும் சட்டவிரோதமானவை. சட்ட விரோத தேர்தல் மூலம் அமைக்கப்பட்ட நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களை கலைக்க வேண்டும். முறைகேடுகள் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி புதிய தேர்தல்கள் நடத்தபட வேண்டும்.மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக அவர்களது கட்சியினரே (பா.ஜனதா) கூறுகிறார்கள். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் (எஸ்.ஐ.ஆர்.) பல முறைகேடுகள் உள்ளது. இந்த செயல்முறையில் பல தவறுகளை செய்வதன் மூலம் ஜனநாயகத்தை பா.ஜனதா வலுவிழக்க செய்கிறது. தவறான செயல் ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 500 வாக்காளர்கள் நீக்கப்பட்டால் அது எத்தகைய சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலாக இருக்க முடியும். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த பலர், தாங்கள் விரும்பும் இடங்களில் (வார்டு கள், பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களில்) உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காக அங்கு சென்று படிவங்களை நிரப்புகிறார்கள். இது முற்றிலும் தவறானது. நேரு, இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, நரசிம்மராவ் மற்றும் ராஜீவ் காந்தி உள்ளிட்ட கடந்தகால தலைவர்கள் யாரும் ஜனநாயகத்தில் இதுபோன்ற செயல்களை செய்ததில்லை. ஆனால் இன்று நீங்கள் செய்யும் தவறான செயல், நமது இளைஞர்கள், ஏழைகள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரை பாதிக்கிறது. ஜனநாயகத்தை அழிக்கிறார்கள் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற தேர்தல் அதிகாரிகள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம் 2023-ன் பிரிவு 16-ன் கீழ் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தங்கள் பதவிக்காலத்தில் எடுக் கும் முடிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் மோடியும், அதனை செயல்படுத்தும் தரப்பினரும் ஒரு சட்டத்தை கொண்டு வந்து ஜன நாயகத்ைைத அழித்து வருகிறார்கள். அவர்கள் அந்த குழுவின் அமைப்பை மாற்றி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/parliament-and-legislative-assemblies-must-be-dissolved-mallikarjun-kharge-insists




