சென்னை, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரூ.600 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஜெயிலர் 2 இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினி - நெல்சன் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதனிடையே, ஜெயிலர் 2 படப்பிடிப்பு தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. கொச்சி பயணம் இந்நிலையில் 'ஜெயிலர் 2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் கொச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் கொச்சி சென்றார். சென்னை விமான நிலையம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்து விமானம் மூலம் கொச்சி புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் திரண்ட ரஜினி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-rajinikanth-heads-to-kochi-for-the-last-leg-of-jailer-2-shoot




