குறுகிய காலத்தில் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது. இப்படி நினைக்கிறவர்கள்தான் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். சூதாட்டத்தில் ஒருமுறை லாபம் கிடைத்ததை வைத்து, திரும்பவும் லாபம் கிடைக்கும் என்று நினைத்து மீண்டும் மீண்டும் பணத்தை இழக்கிறார்கள். கொள்ளை லாபம் என்கிற ஆசையை சாதாரண மனிதர்களிடம் தூண்டி, பெரும் பணத்தை நஷ்டம் அடைய வைப்பதற்கான ஒரு வழிதான் 'ஃப்யூச்சர் அண்ட் ஆஃப்ஷன்' என்று சொல்லப்படும் எஃப் & ஓ வர்த்தகம். இந்த எஃப் & ஓ-வில் தினசரி வர்த்தகம் செய்பவர்கள் இந்த ஆண்டில் மட்டும் ரூ.91,685 கோடி வரை இழந்திருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவலை பங்குச் சந்தை கண்காணிப்பு நிறுவனமான செபி சொல்லி இருக்கிறது. இந்த எஃப் & ஓ வர்த்தகம் தொடர்பாக செபி சொல்லும் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். பங்குச் சந்தை 2026-ஆம் ஆண்டில் வர்த்தகர்கள் எஃப் & ஒ வர்த்தகத்தில் இழந்த மொத்த பணம் ரூ.91,685 கோடி. இதனால் இந்த எஃப் & ஓ வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 106.02 லட்சத்திலிருந்து 87.5 லட்சமாகக் குறைந்திருக்கிறது. கடந்த 2025-ல் எஃப் & ஓ வர்த்தகம் செய்யத் தொடங்கிய புதிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 34.3 லட்சமாக இருந்தது. இது 2026-ல் குறைந்திருக்கிறது. அதிக நஷ்டம் காரணமாக ஏறக்குறைய 46 லட்சம் வர்த்தகர்கள் எஃப் & ஓ வர்த்தகத்தில் வர்த்தகம் செய்வதையே நிறுத்திவிட்டு, வெளியேறிவிட்டார்கள். குறிப்பாக, ரூ.10 ஆயிரம் அளவுக்கு வர்த்தகம் செய்தவர்கள் எஃப் & ஓ வர்த்தகத்தில் அடைந்த நஷ்டம் காரணமாக இதில் பணம் போடுவதையே முழுவதுமாக நிறுத்திவிட்டார்கள். கடந்த ஆண்டில் எஃப் & ஓ வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் ரூ.1.12 லட்சம் கோடியாக இருந்தது; ஆனால், 2026-ல் அடைந்த நஷ்டம் ரூ.1.17 லட்சம் கோடியாக உயரவே செய்திருக்கிறது. அதாவது, 2025-ல் எஃப் & ஓ வர்த்தகத்தில் ஈடுபட்ட முதலீட்டாளர்கள் அடைந்த நஷ்டம் 90.9% எனில், 2026-ல் 87.7% நஷ்டம் அடைந்திருக்கிறார்கள். ஃப்யூச்சர் & ஆப்ஷன் வர்த்தகத்தில் ஃப்யூச்சரைவிட ஆப்ஷன் வர்த்தகம்தான் மிகவும் அதிகமாக இருக்கிறது. 2026-ல் ஆப்ஷன் மூலம் அடைந்த நஷ்டம் என்பது 92 சதவிகிதமாக இருக்கிறது. இதில் 23% பேர் 90 சதவிகித இழப்புக்குக் காரணமாக இருக்கிறார்கள். எஃப் & ஒ வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்களில் 93% பேர் ஆஃப்ஷன் மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். வெறும் 6% பேர் மட்டுமே ஃப்யூச்சரைத் தேர்வு செய்கிறார்கள். பங்குச் சந்தை எஃப் & ஒ வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்கள் சென்னை, கோவை, பெங்களூரு, ஐதராபாத் எனப் பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் அல்ல. நாமக்கல் போன்ற சிறுநகரங்களில் வசிப்பவர்கள்தான் அதிகம் என்கிறது செபி சொல்லும் டேட்டா. ஆக, இன்றைக்கு இந்தியா முழுக்க சுமார் 6 - 7 கோடி பேர் டீமேட் கணக்கினைத் தொடங்கி, பங்குச் சந்தையில் டே டிரேடிங்கும், எஃப் அண்ட் ஒ போன்ற ஊக வர்த்தகத்தில் வர்த்தகமும் செய்து வருகிறார்கள். லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைத்துத்தான் இதில் பணத்தைப் போடுகிறார்கள். ஆனால், இவர்கள் அடைவதெல்லாம் வெறும் நஷ்டம் மட்டுமே. உண்மை இப்படி இருக்க ஒருவருக்கு டீமேட் கணக்கு என்பது தேவைதானா என்ற கேள்வியைக் கேளுங்கள். உங்களிடம் இருக்கும் டீமேட் கணக்கினை உடனே குளோஸ் செய்து, அதை தூக்கி எறியுங்கள்! பங்குச் சந்தையில் தின வர்த்தகம் செய்வதையோ அல்லது எஃப் அண்ட் ஓ-வில் சூதாடுவதையோ உடனே நிறுத்துங்கள். பங்குச் சந்தை என்பது நாம் சூதாடி பணத்தை இழப்பதற்கு அல்ல. சரியான முறையில் முதலீடு செய்து, பணவீக்கத்தைவிட ஓரளவுக்கு நல்ல லாபம் அடைவதற்குத்தான் பங்குச் சந்தை முதலீடு என்பதே இருக்கிறது. எனவே, உங்களுக்கு நஷ்டத்தைத் தரும் டீமேட் கணக்கைத் தூக்கி எறியுங்கள். சூதாடுவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள். மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நீண்ட காலத்தில் நீங்கள் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தைவிட நல்ல லாபத்தை நீங்கள் பார்க்கலாம்! Labham மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா? மியூச்சுவல் ஃபண்டில் SIP முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்! ஏ.ஆர்.குமார் - 89259 44568 சபரிநாதன் - 89259 44569 தங்கலட்சுமி - 95007 77894 வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். வெளிநாட்டில் வசிப்போருக்கு: இந்தியாவில் வசிப்போருக்கு: Labham Youtube Channel: Labham Website: முதலீட்டாளர்களின் கவனத்துக்கு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/personal-finance/future-and-option-sebi-data-warning-demat-account-trading




