கீவ், உக்ரைன் ராணுவ மந்திரி மைக்கேலோ பெடோரோவ் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து கீவில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:- அவர் (பெடோரோவ்) தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். போர் நடந்து வரும் நிலையில் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். ரஷியப் பகுதியில் ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்துவதற்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தனக்கு தகவல் தெரிவித்தது. அதை நம்பி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிடம் அதுகுறித்து பேசினேன். பின்னர் எலான் மஸ்க்கிடம் இதுபற்றி உறுதிகேட்டபோது, அத்தகைய அனுமதி வழங்கப்பட வில்லை என அவர் மறுத்தார். இதனால் டிரம்புடன் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டது. பாதுகாப்புத் துறையில் முன்கூட்டியே நிதி செலவிடப்பட்டதால், 2026-ம் ஆண்டின் 2-வது பாதிக்கான செலவுகளுக்கு 2,700 கோடி டாலர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்களே ராணுவ மந்திரி பதவி நீக்கத்திற்கு காரணமாகும் இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/zelenskyy-details-rift-with-ukraines-dismissed-defense-minister-fedorov




