தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் தமிழ்நாடு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். சாராயம் காய்ச்சிய 2 பேர் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ வல்லநாடு பகுதியில், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வழக்கில் வடக்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த காசி மகன் இசக்கிபாண்டி (வயது 42) மற்றும் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் வேல்துரை(27) ஆகிய 2 பேரையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு அதைத் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த மேற்சொன்ன 2 பேரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 2 பேரையும் கைது செய்ய தூத்துக்குடி மாவட்டக் எஸ்.பி. பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவின் பேரில், அந்த 2 பேர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/two-people-who-sold-liquor-were-jailed-under-the-detention-act




