சென்னை, பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. விவசாயிகளை ஏமாற்றிவிட்டது இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ”தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். பெரு விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்” என த.வெ.க. வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்து முழுமையாக கடன்களை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது. பெரும் அதிர்ச்சி தமிழ்நாட்டில் வறட்சி நிலவும் சூழலில், பாகுபாடின்றி அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் த.வெ.க. அரசு கண்டு கொள்ளவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தீவிரப் பிரசாரம் எனவே, அரசின் இந்த விவசாய விரோதப் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அடுத்த மாதம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், விவசாயிகளை ஒன்றுதிரட்டி த.வெ.க.வை தோற்கடிக்க தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-farmers-association-announces-campaign-against-tvk-in-the-by-election




