குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பியூஷ் (20) என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பூனம் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் அடிக்கடி ஆன்லைன் மூலம் சாட்டிங் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்தனர். பியூஷுடன் அவரது மனைவி மத ரீதியான விரதங்களைக் காரணமாகக் கூறி, உடல் ரீதியான நெருக்கத்தைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். திருமணச் சடங்கின் ஒரு பகுதியாக நெற்றியில் குங்குமம் இட்டு பியூஷ் மனைவி வாழ்ந்தார். ஆனால் பியூஷ் தனது மனைவி வீட்டில் ரகசியமாக முகச்சவரம் செய்வதைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அவர் தனது மனைவி உண்மையில் ஒரு ஆண் என்பதையும், அவர் ஒரு ஓரினச்சேர்க்கை உறவை விரும்புபவர் என்பதையும் பியூஷ் அப்போதுதான் கண்டுபிடித்தார். இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. பெண்ணாக வாழ்ந்த நபரின் பெயர் சந்தன் என்று தெரிய வந்தது. இச்சண்டையால் அவர்கள் பியூஷ், சந்தனை விட்டு பிரிந்து சென்றார். ஆனால் பியூஷ் செல்லும் இடமெல்லாம் சந்தன் சென்றார். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் என்று விரட்டிசென்று இறுதியாக குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பியூஷை சந்தன் கண்டுபிடித்தார். பியூஷ் வேலை செய்த இடத்தில் சென்று சந்தன் வாக்குவாதம் சென்றார். இதையடுத்து சந்தனை பியூஷ் தனியாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத ரயில் தண்டவாளம் இருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சந்தனை மிகப்பெரிய கல் ஒன்றை எடுத்து தாக்கி பியூஷ் கொலை செய்தார். பின்னர் உடலை அங்கிருந்த பாறை மறைவில் வைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். ஆனால் இரண்டு நாள்கள் கழித்த நிலையில் சந்தன் உடல் அழுகிய நிலையில் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தன் பெண்கள் அணியும் ஆடையை அணிந்தபடி இறந்து கிடந்தார். போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அங்கு பியூஷ் மற்றும் சந்தன் வந்த காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் பியூஷைப் பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். சந்தன், பீகாரைச் சேர்ந்தவர் ஆவார். பீகார்: கூட்டுப் பாலியல் கொடுமை; இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் தோட்டா... கும்பல் அட்டூழியம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/husband-kills-instagram-wife-upon-discovering-she-is-a-man



