மும்பை, சில படங்களில் கதைக்கு தேவையில்லாத நெருக்கமான காட்சிகளில் நடிக்குமாறு தன்னை வற்புறுத்தியதாக நடிகை ராதிகா ஆப்தே பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகை ராதிகா ஆப்தே பாலிவுட்டில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராதிகா ஆப்தே. தமிழில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘கபாலி’, ‘வெற்றிச்செல்வன்’, ‘சித்திரம் பேசுதடி-2’, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தொடர்ந்து பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். உள்ளாடையுடன் நடிக்க முடியுமா? இந்த நிலையில், ராதிகா ஆப்தே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- "சில படங்களில் கதைக்கு சம்மந்தம் இல்லாமல் நெருக்கமான காட்சிகளில் நடிக்குமாறு வற்புறுத்தினர். இது போன்ற காட்சிகளில் ஏற்கனவே நடித்திருப்பதால் நான் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டேன் என அவர்கள் நினைத்தார்கள். ஆரம்பத்தில் நான்கு, ஐந்து படங்களில் நிர்வாணமாக நடித்திருந்தேன். முன்பு அப்படி செய்திருக்கிறேன். இப்போது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல் 15 வினாடிகள் மட்டும் போதும், கொஞ்சம் முத்தமிடலாம் என கேட்பார்கள் அதற்கும் சம்மதிக்க மாட்டேன். அடுத்ததாக ஒரு படத்தில் சண்டை காட்சிகளில் உள்ளாடை மற்றும் பிரா அணிந்து கொண்டு நடிக்க முடியுமா? என்று கேட்டார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். முன்பு செய்திருக்கிறீர்களே என கேட்டார்கள். அப்போது செய்தேன். இப்போது முடியாது என்று கூறிவிட்டேன். எல்லையை மீற கூடாது ஒரு நடிகர் ஏற்கனவே சில நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பதற்காக, தொடர்ந்து அதே மாதிரியான காட்சிகளில் நடிக்க சம்மதிப்பார் என்று நினைக்கக்கூடாது. ஒரு திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நடிகர்களின் விருப்பத்தையும் தனிப்பட்ட எல்லைகளையும் மீறி அழுத்தம் கொடுக்க கூடாது." இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/they-asked-to-act-in-underwear-actress-radhika-apte-aadhangam




