ஆமதாபாத், பாரா உலக வில்வித்தை சீரிஸ் (நிலை 3) போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் தோமன் குமார்- ஷியாம் சுந் தர் ஸ்வாமி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 152-139 என்ற புள்ளி கணக்கில் ஈராக்கை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இதேபோல் ஆண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஹர்விந்தர் சிங்- விஜய் சன்டி அடங்கிய இந்திய அணி 6-2 என்ற கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. பெண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் பாவ்னா- பூஜா ஆகியோரை கொண்ட இந்திய அணி 0-6 என்ற கணக்கில் சீனாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி கண்டது. காம்பவுண்ட் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஷீத் தல் தேவி- பாயல் நாக் ஜோடி (இந்தியா) சீனாவிடம் தோற்று பதக்க வாய்ப்பை பறிகொடுத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/para-world-archery-india-wins-2-gold-medals




