சென்னை, பல சிறுமிகளை சீரழித்த 84 வயதான தொழில் அதிபர் வீரமணி 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய காமக்களியாட்டங்க ளுக்கு பக்கபலமாக இருந்ததாக சாந்தி, அவருடைய கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். வீரமணி சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளை தன்னிடம் வைத்துக்கொண்டு போலீசாரிடம் புகார் அளிக்காத குற்றச்சாட்டில் அவரிடம் நீண்ட காலம் உதவியாளராக பணியாற்றிய கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டார். வீரமணி மீது இந்த புகார் எழுந்தபோது அவரை காப்பாற்றுவ தற்காக திரைமறைவில் பல்வேறு சதித்திட்டங்கள் அரங்கேறியதாகவும், அதற்கு ரூ.70 கோடி வரை பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகின. எனவே இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் விஜய் நேரடி கவனம் செலுத்தினார். அவர், இந்த வழக்கில் ஒரு குற்றவாளி கூட தப்பி விடக்கூடாது என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். வீரமணியின் பாலியல் சம்பவங்கள் மற்றும் அவரை காப்பாற்றுவதற்காக அரங்கேறிய முயற்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதால் முதல்-அமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேன்மொழி, திஷா மிட்டல், முத்தரசி, கீதாஞ்சலி ஆகிய 4 பேர் அடங்கிய சிறப்பு புலானய்வு குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழு தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், திமுக மீது பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகிய மூவரையும் ‘சம்மன்’ செய்து விசாரணைக்கு அழைத்து, அவர்களிடம் உள்ள ஆதாரங்களைப் பெற வேண்டும் என சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி புகார் மனு அளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/gem-veeramani-pocso-case-dmk-submits-complaint-to-special-investigation-team




