சென்னை, விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகுமுத்துக்கோன் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துக்கோன் 269-வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன். அடிமையாய் உயிர்வாழ்வதைக் காட்டிலும் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடி மடிவதே மேல் என விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumamuthukon-is-a-great-warrior-who-ignited-the-fire-of-freedom-in-our-land-dmk-leader-mkstalins-post




