லண்டன், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து 290 ரன்கள் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் 110 ரன்கள் இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 180 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. மழையால் ஆட்டம் தாமதம் இந்நிலையில், இந்த டெஸ்ட்டின் 3ம் நாள் ஆட்டம் இன்று காலை 10 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) தொடங்க இருந்தது. ஆனால், மைதானம் அமைந்துள்ள பகுதியில் மழை பெய்து வருவதால் 3ம் நாள் ஆட்டம் தாமதமாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 261 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/england-pakistan-test-match-delayed-by-rain




