கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் மக்களிடம் வரவேற்பைப் பெற்ற 'கட்டா குஸ்தி-2' படத்தைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் விஷ்ணு விஷாலை போனில் தொடர்புகொண்டு பாராட்டி இருக்கிறார். 'கட்டா குஸ்தி-2' இதனை விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருகிறார். அவரது பதிவில், " செம்ம படம். ரொம்ப ஜாலியான எண்டர்டெய்னர். இந்த மாதிரி படம் இப்போ எல்லாம் வர்றதே இல்ல. ரொம்ப நல்லா பெர்ஃபார்ம் பண்ணிருக்கீங்க. ஐஸ்வர்யா லெக்ஷ்மியும், நல்ல பெர்ஃபார்மன்ஸ். குட்டி சாரா பாப்பா, எப்படி புடிச்சீங்க. ரொம்ப அற்புதமா நடிச்சிருக்காங்க. காளி வெங்கட்: 'திரும்ப ஸ்கூலுக்குள்ள போகும்போது வந்த பதற்றம் இருக்கே!' - கழுகுமலை ஸ்கூல் ரீயூனியன் விஷ்ணு, உங்களுக்கு நல்ல ஸ்கிரிப்ட் சென்ஸ் இருக்கு. இன்னும் நல்ல படங்கள் நிறைய குடுங்க" என்று ரஜினிகாந்த் வாழ்த்தியிருப்பதாக விஷ்ணு விஷால் பதிவிட்டிருக்கிறார். மேலும் "நம்ம ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் கட்டா சூஸ்தி - 2 படத்தை பார்த்துட்டு போன் பண்ணி பேசினத நெனச்சு ரொம்பவே மட்டற்ற மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறேன்! View this post on Instagram இந்த ஒட்டுமொத்த பயணத்தோட மிகச்சிறந்த தருணம் அவரோட இந்த போன் கால் தான். அவரோட இந்த வார்த்தைகள், என்னோட அடுத்தடுத்த பயணங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமருந்து. மிக்க நன்றி சார்!" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://cinema.vikatan.com/kollywood/rajiniknath-praised-gatta-kusthi-movie




