திண்டுக்கல், 10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 239 ரன்கள் குவிப்பு இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் கேப்டன் சித்தார்த் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் குவித்தார். அதேபோல், பாலசுப்பிரமணியன் 84 ரன்கள் குவித்தார். மதுரை தரப்பில் அந்த அணியின் குர்ஜப்நீத் சிங் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிரடி சதம் இதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மதுரை அணியின் தொடக்க வீரர்கள் ராம் குமார் 6 ரன்னிலும், மகாதேவன் 41 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த சாரங்கராஜன் சதுர்வேத், கேப்டன் பாலசந்தருனுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாலசந்தர் 37 ரன்னில் அவுட் ஆனார். மதுரை வெற்றி ஆனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாரங்கராஜன் சதம் விளாசினார். அவர் 47 பந்துகளில் 121 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில் மதுரை 19.3 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கோவை கிங்சை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அசத்தல் வெற்றிபெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-madurai-panthers-stunning-win-over-coimbatore-kings




