லாகூர், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப்படையினர் மீதும், பொதுமக்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. 9 வீரர்கள் பலி இந்நிலையில், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் பெண்கள் பிரிவான கரீமா ஆயுத பிரிவு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த 22ம் தேதி இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/nine-soldiers-killed-in-pakistan-attack




