மெக்சிகோ சிட்டி, 23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடு களில் நடந்து வருகிறது. லீக் மற்றும் 2-வது சுற்று முடிவில் 16 அணிகள் 3-வது சுற்றுக்கு வந்தன. தற்போது 3-வது சுற்று ஆட்டங்கள் (ரவுண்ட் 16) நடைபெறுகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை மெக்சிகோ சிட்டியில் உள்ள அஸ்டெக் ஸ்டேடியத்தில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி, போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான 14-வது இடத்தில் உள்ள மெக்சிகோவுடன் மல்லுகட்டியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் மெக்சிகோ வெளியேறியது. இந்த நிலையில், மெக்சிகோ சிட்டியில் உள்ள அஸ்டெக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய உலகக் கோப்பை போட்டி தொடரில் மெக்சிகோ அணி தோல்வியை சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு அந்த அணி இங்கு ஆடிய 10 ஆட்டங்களில் 8-ல் வெற்றியும், 2-ல் டிராவும் கண்டிருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/football/football-world-cup-mexico-suffers-first-defeat-on-home-soil




