கொழும்பு, இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, டி20 சர்வதேச தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தொடரில் தனிப்பட்ட முறையிலும் அணியாகவும் சிறப்பாக செயல்பட்டது குறித்து பேசிய அவர், இது மீண்டும் ஒரு அற்புதமான சாதனை. இதற்காக அனைவரும் உண்மையிலேயே பெருமைப்பட வேண்டும். இந்த தொடரில் அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கினர்” என்று தெரிவித்துள்ளார். தொடரில் அதிக போட்டிகளில் விளையாடாத வீரர்களும் சிறப்பாக செயல்பட்டதை அவர் குறிப்பிட்டு பாராட்டினார். குறிப்பாக சோனி பேக்கர், பவர் பிளேயில் 2 போட்டிகளில் தலா 3 ஓவர்கள் வீசியதை சுட்டிக்காட்டிய அவர், அந்த கடினமான ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுக்காமல் விக்கெட்டுகளையும் வீழ்த்தியது சிறப்பான சாதனை என்று பாராட்டினார். மேலும் லியாம் டாசன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரும் தொடரில் சிறப்பாக செயல்பட்டதாக இங்கிலாந்து கேப்டன் குறிப்பிட்டார். முழு அணியையும் பற்றி என்னால் சொல்ல முடியும். ஒவ்வொரு போட்டியிலும் சூழ்நிலை சற்று வித்தியாசமாக இருந்தது. அதற்கு ஏற்ப நாங்கள் சிறப்பாக மாற்றிக்கொண்டு விளையாடினோம். ஆடுகளத்தின் சூழ்நிலையை நாங்கள் மிகவும் நன்றாக பயன்படுத்திக் கொண்டோம்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/back-at-the-top-of-the-rankings-what-did-england-captain-brook-say




