‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சுமித்ரா தேவி நடிகர் சிம்புவை சந்தித்த பிறகு, “வாழ்க்கையில் சில தருணங்கள் நம் கண்முன்னே நடந்தாலும் அதனை நம்பமுடியாமல் இருக்கும்” என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். ‘மொத ராத்திரி’ படம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. காதல், நகைச்சுவை கலந்த கதை புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியின் முதலிரவில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‘மொத ராத்திரி’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பைப் பெற்றன. ரூ.8 கோடி வசூல் ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியான ‘மொத ராத்திரி’ படம் 3 வாரத்தில் ரூ.8 கோடி வசூலித்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. View this post on Instagram ‘மொத ராத்திரி’ படத்தில் கதாநாயகனின் தங்கையாக நடித்துள்ள சுமித்ரா தேவிக்கும் ரசிகர்களிடம் மிகுதியான வரவேற்பு கிடைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் கவனம்பெற்ற சுமித்ரா தேவி முதல்முறையாக வெள்ளித்திரையில் நடித்துள்ளார். சிம்புவை சந்தித்த நடிகை சுமித்ரா நெகிழ்ச்சி படக்குழுவினரும் அவரும் நடிகர் சிம்புவைச் சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியாக தனது இன்ஸ்டா பதிவில் “வாழ்க்கையில் சில தருணங்கள் நம் கண்முன்னே நடந்தாலும் அதனை நம்பமுடியாமல் இருக்கும். என்னுடைய முதல் காதல். திரையில் பார்த்து, தூரத்தில் இருந்தே அவர் மீது பற்று ஏற்பட்டுவிட்டது. அவரது படங்கள் பார்த்து சிரித்து, அவரது தோற்றங்களைப் பார்த்து பைத்தியம் பிடித்திருக்கிறது. என் நெருங்கிய வட்டத்தில் சிம்புவைப் பற்றி லட்சம் முறை பேசியிருக்கிறேன். ஆனால், இந்த நாளில் அவருக்கு சில அடிகள் பக்கத்தில் இருக்கிறேன். நடந்துவிட்டது. அவருக்கு மிக அருகில் நின்று பார்த்தபோது, என் அனைத்து தன்னம்பிக்கைகளும் உடைந்து போனது. எனது கைகள் நடுக்கத்தினால் உதறின; இதயத்துடிப்புகள் அதிகர்த்தன. என் முகத்தை மறைக்காமல் அவரைச் சரியாகக் கூட பார்க்க முடியவில்லை. என் அன்பானவர் எனக்கு அருகே இருக்கும்போது என்னால் எப்படி சாதாரணமாக இருக்க முடியும். இந்தப் புகைப்படங்களை பார்க்கும்போதும், சிறுமி தன்னுடைய மிகப்பெரிய அன்பை நேரில் பார்த்தது போலவே இப்போதும் சிரிக்கிறேன். திரையில் அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். நேரில் பார்க்கும்போது வித்தியாசமாக இருந்தது. மற்றவர்களுக்கு இது வெறுமனே ஒரு புகைப்படமாகவே இருக்கும். ஆனால், எனக்கு நீண்ட நாள்களாக நினைவில் வைத்து நினைத்துக்கொண்டே இருக்கும் ஒரு ஞாபகம். இப்போதும் நடுக்கமாக இருக்கிறது. எப்படி நடந்தது என இப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். நிஜமாகவே இது நடந்துவிட்டதா? என அந்தப் படங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/modha-rathri-actress-sumithra-devis-emotional-post-about-meeting-simbu


