சென்னை, ‘ஜனநாயகன்’ படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படம் முன்னதாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி ஜூன் 19 அல்லது ஜூன் 22-ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் பரவின. ஆனால், சென்சார் நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. தணிக்கை சான்றிதழ் சமீபத்தில் தணிக்கை வாரியம் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நீளம், 183 நிமிடங்கள் (3 மணிநேரம் 3 நிமிடங்கள்) என்றும் தெரிவித்துள்ளனர். படத்தின் தணிக்கைச் சான்றிதழுக்காக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், படத்தில் 12 இடங்களில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், மாற்றியமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தணிக்கை வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் ‘டிவிகே சட்டம்’ என்ற வசனம் மாற்றியமைக்கப்பட வேண்டும், படம் முழுவதும் ‘டிவிகே’ என்று வரும் இடங்கள் அனைத்தும் மியூட் செய்யப்பட வேண்டும், தேசிய கொடி தரையில் விழுவது போன்ற காட்சிகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும், குழந்தை ஒன்று எரிக்கப்படுவது போன்ற காட்சிக்கு மாற்றாக வேறொரு காட்சி வைக்கப்பட வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முத்திரை அல்லது இலச்சினையை அவமதிக்கும் வகையில் உருட்டி விடுவது போன்ற காட்சியையும் நீக்க வேண்டும். ‘புதிய இந்தியா’ என்ற வார்த்தையை நீக்கவும்,‘இந்தியாவை என் கால்ல விழ வைக்கிறேன்’ என்ற வசனத்தை மியூட் செய்யவும் தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. தணிக்கை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்தில் மொத்தம் 20 விநாடி காட்சிகள் நீக்கப்பட்டும், 10 விநாடிகள் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. படத்தின் மொத்த ஓட்ட நேரம் 183 நிமிடங்கள் 11 விநாடிகள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) என குறிப்பிடப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் போஸ்டரில் ‘மாண்புமிகு முதல்--அமைச்சர் விஜய்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாக இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vijays-jananayagan-film-crew-announces-release-soon




