நெல்லை, நெல்லை மேலப்பாளையத்தில் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனமுடைந்த உடற்பயிற்சி நிலைய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். உடற்பயிற்சி நிலைய மேற்பார்வையாளர் நெல்லை மேலப்பாளையம் ஞானியாரப்பா தெருவைச் சேர்ந்த மஸ்தான் மகன் அப்துல்ரசாக் (வயது 29). இவர் நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் உடற்பயிற்சி நிலைய மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரும், வல்லநாடு அருகேயுள்ள மியான்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஆயிஷா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் என 10 மாதமே ஆன இரட்டை குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே தகராறு ஆயிஷா தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று கணவரிடம் கூறி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஆயிஷா, சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை நேற்று முன்தினம் இரவு அப்துல்ரசாக் மனைவியுடன் செல்போனில் பேசி வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் ஆயிஷா வரமறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அப்துல்ரசாக் நேற்று அதிகாலை தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அப்துல்ரசாக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/gym-employee-commits-suicide-after-wife-refuses-to-come-to-support-family




