சென்னை, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “ஆப்ரோ டிரஸ்ட் (APHRO TRUST) என்ற நிறுவனம் 2010 முதல் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த மகளிர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாக மக்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளார்கள். இதனால் இவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு, அசோக்நகர், சென்னையில் விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி ஆப்ரோ டிரஸ்ட் நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் அசல் ஆவணங்களுடன் 17.08.2026 முதல் 21.08.2026 வரை ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு फ्र नं. 7010190757, 9498109056, 9840895154, 9498127068 ல் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/members-of-the-public-who-were-defrauded-after-paying-money-to-the-afro-trust-company-may-file-complaints-along-with-supporting-documents-tamil-nadu-police-announcement




