சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் உறுதிமொழியை வாசித்தார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முதல்-அமைச்சர் விஜய் அரசுமுறை பயணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றிருந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வண்டன் வாழ் தமிழர்கள் ஏராளமானோர் அவரை பார்க்க விமான நிலையத்துக்கு திரண்டு வந்திருந்தனர். கார் பந்தயம் லண்டனில் 12-ந்தேதி நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தய போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்காக ரூ.15 ஆயிரத்து 300 கோடி அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்தார். இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்துலண்டனில் முதல்-அமைச்சர் விஜய் தங்கியிருந்த ஓட்டலில் அவரை சந்திக்க லண்டன் வாழ் தமிழர்கள் ஏராளமானோர் திரண்டனர். ஆனால் பாதுகாப்பு கருதி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான அவரை பார்க்க முடியாமல் திரும்பி சென்றனர். 7 நாள் லண்டன் பயணம் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை 8 மணிக்கு சென்னை திரும்பினார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு முதல்-அமைச்சர் விஜய் விமான நிலைய 'வி.ஜ.பி. கேட் வழியாக காரில் வெளியே வந்து நீலாங்கரையில் உள்ள வீட்டுக்கு சென்றடைந்தார். சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு இன்று பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தலைச்செயலகத்தில் மாலை 4 மணிக்கு சமூக நீதி நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி எடுப்பதற்காக முதல் அமைச்சர் விஜய் தலைமைச் செயலகம் சென்றார். பெரியார் புத்தகம் கொடுத்து வரவேற்பு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வர் விஜய்க்கு, தந்தை பெரியாரின் புத்தகத்தை வழங்கி அமைச்சர் மரிய வில்சன் வரவேற்றார். தொடர்ந்து சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மத்தை கடைபிடிப்பதாக சமூகநீதி உறுதிமொழியை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றார்.தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் உறுதிமொழியை வாசிக்க துறை செயலாளர்கள் உறுதிமொழியேற்றனர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். முன்னதாக தலைமை செயலகத்தில் தந்தை பெரியார் படத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-takes-oath-on-social-justice-day




