சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப் பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் தமிழக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "திருவொற்றியூரில் அரசுப் பள்ளியில் போதைப் பொருள் உட்கொண்டதைத் தட்டிக்கேட்ட மாணவர்களில் தனுஷ் (வயது 17) என்ற +2 மாணவனை அதே பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கும்பலாகச் சேர்ந்துகொண்டு கொடூரமாகத் தாக்கியதில் மாணவன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. க்ரைம் இந்தக் கொடூரமான படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. படுகொலை செய்யப்பட்டுள்ள மாணவரின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. திருவொற்றியூர் வசந்தா நகர் 1வது தெருவில் வசிக்கும் பட்டியலின வகுப்பைச் சார்ந்த மாணவன் தனுஷ் அப்பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார். `நான் அந்த 56 வயது இளைஞரைப் பற்றி பேசவில்லை.'' - நாடாளுமன்ற வளாகத்தில் மோடி மறைமுக கிண்டல் வழக்கம் போல ஆகஸ்ட் 12 அன்று பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியர் பள்ளியில் மேல்மாடியில் உள்ள அறையிலிருந்து நோட் புத்தகம் எடுத்து வரச் சொல்லியுள்ளார். மாணவன் தனுஷ் மற்றும் அவருடன் மற்றொரு மாணவனும் மேல்மாடிக்குச் சென்றுள்ளனர். அங்கு கஞ்சா போதையில் இருந்த சில மாணவர்கள் புகையை மாணவர்கள் மீது ஊதியுள்ளனர். இதை தனுஷுடன் சென்ற மாணவர் தட்டிக் கேட்டுள்ளார். இருவரும் ஆசிரியரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களும் சம்பந்தப்பட்ட மாணவர்களைக் கண்டித்துள்ளனர். இதை மனதில் வைத்துக் கொண்டு பள்ளியில் போதைப்பொருளை உட்கொண்ட மாணவர்கள் மற்றும் சிலர் கும்பலாக ஒன்றுசேர்ந்து ஆகஸ்ட் 14, 2026 அன்று மாணவன் தனுஷைக் கடுமையாகத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் உயிரிழந்துள்ளார். இதுவரை 12 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மூன்று பேர் மட்டுமே 18 வயதுடையவர்கள், மற்றவர்கள் 17 வயதுடையவர்கள். பெ.சண்முகம் சமீபத்தில், கோவை, தனியார் கல்லூரியில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கத்தின் காரணமாக கல்லூரி மாணவன் கும்பல் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இன்னும் மக்கள் மனதிலிருந்து நீங்காத நிலையில், தற்போது திருவொற்றியூரில் பள்ளி மாணவர் போதைப் பொருளினால் கும்பல் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படுகொலை போதைப் பொருளினால் ஏற்பட்டுள்ள கொலை என வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று கோரி பெற்றோர்கள் தங்களது மகனின் உடலை வாங்க மறுத்துப் போராடி வருகின்றனர். எனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும், மகனைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று உரிய முறையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும், மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், விடுதிகள் உள்ளிட்டுச் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டுமெனவும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளையும் அதற்கு உடந்தையாக உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது" என்று தெரிவித்திருக்கிறார். பள்ளி மாணவர் கொலை: "அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு" - உதயநிதி கண்டனம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/school-students-murder-cpms-shanmugam-condemns




