புதுடெல்லி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் வருகிற செப்டம்பர் 12-ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் இடம்பெற்றுள்ள இந்த கவுன்சில், ஓராண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு கூடுகிறது.இதற்கு முன்பு, கடந்த 2026-ம் ஆண்டு செப்டம்பர் 3, 4-ந் தேதிகளில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகளில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசும், மாநில அரசுகளும் முடிவு செய்தன. அதன்படி, ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 5 மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகளாக மாற்றப்பட்டன. மிகவும் ஆடம்பரமான பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 40 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.முன்னதாக 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வரி அடுக்குகள் நடைமுறையில் இருந்து வந்தன. இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் வருகிற செப்டம்பர் 12-ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/gst-council-to-meet-on-sept-12-state-finance-ministers-to-participate




