மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார். சட்டமன்றத்தில் பேசிய விஜய், "ஐ.ஏ.எஸ் ஆபிசர்கள் பெயரும் டாஸ்மாக் விவகாரத்தில் அடிபடுகிறது. ரத்தீஸ் என்பவரின் பெயரும் அதில் அடிபடுகிறது. ரத்தீஸின் சொல்படிதான் ஐ.ஏ.எஸ் அதிகாரி செயல்பட்டார் என அமலாக்கத்துறை கூறுகிறது. முதல்வர் விஜய் அவரை பவர் ப்ரோக்கர் என்கிறார்கள். நம் அரசு வந்தவுடன் ரத்தீஸ் ஏன் துபாயில் போய் ஒளிந்திருக்கிறார்? பார் ஓனர்களிடமிருந்து பார்ட்டி பண்ட் வாங்கியிருக்கின்றனர். அவர்களை கரூர் கேங் என அமலாக்கத்துறை கூறுகிறது. Malpractice, Fraud, Abusing Power, Karur Gang, Corrupt. இந்த வார்த்தைகளைத்தான் திமுகவை பற்றி அமலாக்கத்துறை குறிப்பிடுகிறது. திமுக இருக்கிற இடத்துலதான் தப்பு நடக்கும். தப்பு நடக்குற இடத்துலதான் திமுக இருக்கும். கடந்த வாரம் பேசும் போது என் டேபிளில் 3 பைல் இருக்கிறது என்றேன். அதை ஓப்பன் பண்ணுவதற்கு முன் ஒரு சாம்பிள் பார்ப்போம். கடந்த திமுக அரசில் அமலாக்கத்துறை அனுப்பிய கோப்பு இங்கே. "கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் Take Diversion நாடகம்"- முதல்வர் மீது அன்பில் மகேஸ் விமர்சனம் சர்காரிய கமிஷனில் இருப்பதை பார்ப்போம். வீராணம் திட்டத்தில் சத்யநாராயணா பிரதர்ஸ் ஒப்பந்தம் எடுக்க மாறன் இரண்டரை சதவீத கமிஷன் கேட்டதாக அந்த கோப்பில் இருக்கிறது. அந்த அறிக்கை வந்து பொன் விழாவே வந்துவிட்டது. 1970-74 வரை தவணை முறையில் 29 லட்சம் கமிஷன் வாங்கப்பட்டதாக அந்த கோப்பில் இருக்கிறது. கலைஞர் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. இதெல்லாம் நான் சொல்லும் குற்றம் இல்லை. அமலாக்கத்துறை சொல்லும் குற்றச்சாட்டு" என்று திமுகவை கடுமையாகப் பேசியிருந்தார். முதல்வர் விஜய் இந்நிலையில் முதல்வர் விஜய்யின் பேச்சு குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM. எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!" என்று விமர்சித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/udhayanidhi-stalin-criticizes-vijay-tn-assembly-speech


