புதுச்சேரி, தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம்தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படு கிறது. இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே கடந்த 4-ந் தேதி அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி கோர்ட்டில் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டார்.இந்த வழக்கு நேற்று மீண்டும் புதுச்சேரி முதலாவது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி சந்திரசேகர் (பொறுப்பு) முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வக்கீல், அமைச்சர் மரியவில்சனை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். மேலும் எதிர் தரப்பினர் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பாக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரவும் மனு தாக்கல் செய்த னர். இந்த வழக்கு விசாரணையை, நீதிபதி நாளை (வெள்ளிக்கிழமை) தள்ளி வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/tamil-nadu-minister-maria-wilson-files-petition-in-puducherry-court-hearing-tomorrow




