தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளில் கைரேகை பதிந்திருக்க வேண்டும். இது குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்குத்தான் இந்த நடைமுறை. ஒருவேளை, குடும்ப உறுப்பினர்களில் ஒருவரின் கைரேகை மிஸ் ஆனாலும், அவர்களது பெயர் ரேஷன் அட்டையில் நீக்கப்படலாம். இதனால், ரேஷன் அட்டைகளில் eKYC-ஐக் கட்டாயம் செய்து முடித்திருக்க வேண்டும். அரசின் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரேஷன் அட்டைகளில் கைரேகை சரிபார்ப்பு நடந்து வருகிறது. இதுவரை 96.21 சதவிகிதம் மட்டுமே முடிந்துள்ளது. ரேஷன் கடைGold: மீண்டும் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; என்னதான் காரணம் இதற்கு? இன்னும் உயருமா? ஒருவேளை, நீங்களோ, உங்கள் குடும்ப உறுப்பினரோ, கைரேகை சரிபார்ப்பை மிஸ் செய்திருந்தால், சூப்பர் வாய்ப்பு காத்திருக்கிறது. வருகிற சனிக்கிழமை (ஆகஸ்ட் 29), அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒருவேளை, இதை இப்போதும் தவறவிட்டால், ரேஷன் அட்டையிலிருந்து உங்கள் பெயர் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கூட உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/tamil-nadu-ration-card-ekyc-special-camp-on-october-29


