சென்னை, சென்னை தி.நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ், த.வெ.க. பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பர்வேஸ் பேசியதாவது;- “தி.நகர் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அன்பான ஒரு செய்தியை சொல்கிறேன். உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த சட்டமன்ற உறுப்பினர்(என்.ஆனந்த்), நேரம் தவறாமை, பொறுப்புணர்ச்சி, விசுவாசம் மற்றும் தெய்வ பக்தி ஆகிய நான்கையும் கொண்டவர் ஆவார். கடந்த 15 வருட காலமாக அவருடன் நான் பயணித்து, அவருடனேயே வளர்ந்து இந்த இடத்தில் இன்று நிற்கிறேன். என் தந்தைக்கு அடுத்து என்னை வழிநடத்தக்கூடிய ஒரே நபர் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தான். நான் இன்று அமைச்சராக நிற்கிறேன் என்றால் அதற்கு அதுக்கு ஒரே காரணம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய். என்னுடைய உழைப்பை கொண்டு போய் தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் எடுத்துச் சொன்னவர் அண்ணன் என்.ஆனந்த் தான். அவரை இந்த தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில ஜெயிக்க வைத்ததற்காக அவர் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/n-anand-is-the-only-person-who-guides-me-after-my-father-minister-parvez-speaks-with-emotion



