திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் சந்தேகப்படும்படி அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 6 பேரை அதிரடியாக கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டத்திற்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில் இன்று அதிகாலையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அரிவாள்களுடன் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த 6 பேரை துரிதமாக செயல்பட்டு போலீசார் கைது செய்தனர். 6 பேர் அதிரடி கைது ஏற்கனவே 19 வழக்குகளை உடைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி மணிகண்டன்(எ) வாத்துமணி (வயது 27), 18 வழக்குகளை உடைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி காளிமுத்து(23), 11 வழக்குகளை உடைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி பொன்ரங்கம்(எ) பொன்ராஜ்(19) மற்றும் சுடலை கிருஷ்ணன்(எ) முருகன்(40), இசக்கிமுத்து(எ) இயேசுராஜா(29), மகாராஜன்(18) ஆகிய 6 பேர் இன்று காலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 3 அரிவாள்கள், 2 பைக்குகள், 1 கார் பறிமுதல் கைது நடவடிக்கையின்போது பொன்ரங்கம்(எ) பொன்ராஜ் தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்ததில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 3 அரிவாள்கள், 2 பைக்குகள் மற்றும் 1 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/6-people-arrested-for-roaming-around-in-paddy-fields-with-sickles-car-bikes-seized




