ரவி மோகன் இயக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், ஜெயம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தற்போது ரவி மோகன், கராத்தே பாபு, பென்ஸ், ப்ரோ கோட் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது நீண்டநாள் கனவை நனவாக்கும் வகையில் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்ற திரைப்படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை ரவி மோகனே தயாரிக்கவும் செய்கிறார். ரவிமோகன் படத்திற்கு இசையமைக்கும் கெனிஷா ரவிமோகன் இயக்கி தயாரிக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்திற்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் இசையமைக்க உள்ளதாக ரவிமோகன் ஸ்டியோஸ் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இந்த நிலையில், ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘ஹையர்’ பாடல் வரும் 10 ஆம் தேதி வெளியாகும் என புரமோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரவி மோகன் மற்றும் யங் ராஜா எழுதிய இப்பாடலுக்கு கெனிஷா இசையமைக்கிறார். மேற்கத்திய இசை பாணியில் தன் பாடல்களைப் பாடிய கவனம் பெற்றவரான கெனிஷா முதல்முறையாக இசையமைக்க உள்ளதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ravi-mohans-an-ordinary-man-film-first-single-update




