நியூயார்க், 10 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஓபன் காலிறுதியில் 2 அமெரிக்க வீராங்கனைகள் நேருக்கு நேர் மோதுகின்றனர். வெற்றி 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் 25-ம் நிலை வீராங்கனையான எம்மா நவாரோ, அன்னா கலின்ஸ்காயாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய நவாரோ, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியைப் பதிவு செய்து காலிறுதிக்கு தகுதி பெற்றார். 4-வது கிராண்ட்ஸ்லாம் இந்த வெற்றியின் மூலம் நவாரோ தனது டென்னிஸ் வாழ்க்கையில் 4-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பு 2024 விம்பிள்டன், 2024 அமெரிக்க ஓபன் மற்றும் 2025 ஆஸ்திரேலிய ஓபன் தொடர்களிலும் அவர் காலிறுதியை எட்டியிருந்தார். அமெரிக்க வீராங்கனைகள் மோதல் காலிறுதியில் நவாரோ, சகநாட்டு வீராங்கனையும் 3-ம் நிலை வீராங்கனையுமான ஜெசிகா பெகுலாவை எதிர்கொள்கிறார். இதன்மூலம் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இரு அமெரிக்க வீராங்கனைகள் நேருக்கு நேர் மோத உள்ளனர். 2015-ம் ஆண்டு செரீனா வில்லியம்ஸ், தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தியிருந்தார். சிர்ஸ்டியாவை வீழ்த்திய பெகுலா முன்னதாக நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா, ருமேனியாவின் 16-ம் நிலை வீராங்கனையான சொரானா சிர்ஸ்டியாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் பெகுலா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/tennis/navarro-pegula-book-first-all-american-us-open-qf-since-2015




