சென்னை, காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15 மாவட்டங்களில் மழை அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-likely-in-15-districts-including-chennai-until-1-pm




