கடலூர், கடலூர் துறைமுகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், அங்கன்வாடி பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய 3 வயது பெண் குழந்தை நேற்று மாலை அவரது வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையின் உடல்நிலையை பரிசோதனை செய்து, உரிய சிகிச்சைகளை அளித்த மருத்துவர்கள், அந்த குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை உறுதி செய்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நபரை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் எனக்கோரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், குழந்தையின் வீட்டின் அருகில் வசிக்கும் 17 வயது ஐ.டி.ஐ. மாணவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த மாணவனிடம் நடத்திய தீவிர விசாரணையில், அங்கன்வாடிக்கு சென்று திரும்பிய குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டான். இதையடுத்து அந்த மாணவனை கைது செய்த போலீசார், தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-abuse-of-3-year-old-child-in-cuddalore-iti-student-arrested




